திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (11:53 IST)

ரஷ்யாவோடு ஆயுத புழக்கம் கூடாது! இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை!

ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கியதற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் அதிபர் ட்ரம்ப் தற்போது அதிகாரத்தில் உள்ளதால் அவசர அவசரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கியதற்காக துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.

ரஷ்யா தயாரித்த எஸ் 400 என்ற ஏவுகணையை வாங்கியதற்காக துருக்கி மீது இந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், துருக்கு நேட்டோ அமைப்பின் நட்பு நாடு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யாவுடனான ஆயுத புழக்கம் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.