Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிரம்ப்பின் மனைவியும் மகளும் போட்டி போடுவது எதற்கு தெரியுமா?


sivalingam| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (05:52 IST)
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவியும், மகளும் ஒரு விஷயத்தில் போட்டு போடுவதாகவும், இந்த கடும்போட்டி எதில் போய் முடியும் என்பது த்ரில்லாக இருப்பதாகவும் அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த போட்டி என்ன தெரியுமா? அழகான பெண்கள் பட்டியலில் யார் முதலில் வருவது என்பதில்தான்


 
 
ஆம், அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹில் என்ற பத்திரிகை அழகான பெண்கள் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது. 50 பெண்கள் கொண்ட இந்த பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்து விருது கொடுக்கவுள்ளது. இந்த பட்டியலில்தான் அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலேனியா மற்றும் அவரது மகள் இவாங்கோ ஆகியோர் உள்ளனர்.
 
மேலும் இந்த இருவர் மட்டுமின்றி வெள்ளை மாளிகையின் தொடர்பு துறை இணைப்பாளர் லேயா லெவெல் மற்றும் வெள்ளை மாளிகையின் தலைமை பணியாளர் ரெவீன் பிரீபஸ்க்கு உதவியாளராக இருக்கும் மல்லோரி ஹன்டே ஆகியோர்களும் இந்த பட்டியலில் உள்ளனர். இன்னும் ஒருசில நாட்களில் முடிவு அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த பட்டத்தை வெல்வது யார்? என்று அறிவதில் அமெரிக்கர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :