வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2017 (04:02 IST)

இந்தியாவுடன் சேர்ந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை அழிப்போம். டிரம்ப்

இந்திய பிரதமர் மோடி நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களின் வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.


 


சுமார் ஐந்து மணி நேரம் வெள்ளை மாளிகையில் தங்கிய பிரதமர் மோடி, டிரம்புடன் இரவு விருந்தில் கலந்து கொண்டார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி மற்றும் இந்தியா குறித்து டிரம்ப் பெருமையுடன் சில கருத்துக்களை தெரிவித்தார். அவர் கூறியதாவது:

மோடியின் வருகை அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்துள்ளது. பல பொருளாதார சீர்திருத்தம் செய்து வெற்றி கண்டவர் மோடி. அமெரிக்காவின் தரமான ராணுவ தளவாடங்கள் 365 மில்லியன் டாலர் அளவில் இந்தியா வாங்கியது மகிழ்ச்சி. இந்தியா - அமெரிக்கா உறவு மிக மிக வலிமையானதும், சக்தி வாய்ந்ததுமாக உள்ளது. இந்தியாவுடனான எங்கள் நட்பு முன்பை விட வலுப்பெற்றுள்ளது.

இந்தியா மிக வேகமாக வளரும் நாடு. அதன் பொருளாதார வளர்ச்சி பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. அமெரிக்காவும், இந்தியாவும் சேர்ந்து தீவிர இஸ்லாமிய பயங்கரவாதம் அமைப்புகளை அழிக்க முயற்சிக்கும்' இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.