வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஜூன் 2018 (21:17 IST)

வடகொரிய அதிபரை அடுத்து சிங்கப்பூர் சென்றார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் ஆகிய இருவரும் வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நேரில் சந்தித்து அணு ஆயுத குறைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரலாற்று சிறப்பு மிக்க இந்த சந்திப்பை உலகமே ஆர்வத்துடன் கவனித்து வருகிறது.
 
இந்த நிலையில் இன்று மதியம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூருக்கு ஏற்கனவே வந்துவிட்ட நிலையில் சற்றுமுன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்துள்ளார். இருதலைவர்களும் நாளை ஓய்வு எடுத்துவிட்டு நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். 
 
அமெரிக்க அதிபரின் சிங்கப்பூர் வருகையை முன்னிட்டு நாளை முதல் அதாவது ஜூன் 11 முதல் 13 வரையிலான மூன்று நாட்களில் சிங்கப்பூர் வான்பரப்பில் விமானங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.