ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 நவம்பர் 2022 (13:24 IST)

’என்ன கல்யாணம் பண்ணிக்கோ.. ப்ளீஸ்’ – மறதியால் மனைவியை படுத்தும் கணவர்!

USA
விபத்து ஒன்றில் நினைவை இழந்த நபர் ஒருவர் தனது மனைவியை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் வெளியான அரண்மனை படத்தில் நடிகர் மனோபாலா, கோவை சரளா தம்பதியராக இருப்பர். ஆனால் ஒரு விபத்தால் மனோபாலா பழைய நினைவுகளை மறந்து தான் கோவை சரளாவை மணந்து கொண்டது தெரியாமல் கல்யாண டார்ச்சர் கொடுப்பார். அதுபோன்றதொரு சம்பவம் அமெரிக்காவிலும் நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஆன்ரூ என்ற நபர் ஒருமுறை மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்திற்குள்ளாகியுள்ளார். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடல்நலம் தேறி விட்டாலும் பலத்த அடியால் பழைய நினைவுகளை மறந்துவிட்டார். 58 வயதாகும் ஆன்ரூவிற்கு தனக்கு திருமணமானது, குழந்தைகள் இருப்பது கூட நினைவில் இல்லையாம்.

இந்நிலையில் தனது மனைவியின் மேல் மீண்டும் புதிதாக காதல் கொண்ட ஆன்ரூ தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தனது மனைவியிடம் விருப்பம் தெரிவித்துள்ளாராம். இந்த சம்பவம் பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 29 வருட நினைவுகளை ஆன்ரூ இழந்துவிட்டதால் அவர் மகிழ்ச்சிக்காக மீண்டும் திருமணம் செய்து கொள்ள அவரது மனைவி சம்மதித்துள்ளாராம்.

Edit By Prasanth.K