வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 27 ஆகஸ்ட் 2015 (03:02 IST)

சீக்கியர்கள் படுகொலை விவகாரம்: சோனியா காந்திக்கு எதிரான வழக்கு அமெரிக்க நீதி மன்றத்தில் தள்ளுபடி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்திரவிட்டது.
 

 
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் பலர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
 
இந்த கலவரத்துக்கு காரணமான சிலரை இந்திய காங்கிரஸ் தலைவர்களை சோனியா காந்தி பாதுகாத்து வருவதாக, அமெரிக்காவில் உள்ள நீதிக்கான சீக்கியர்கள் என்ற அமைப்பு குற்றம் சாட்டியது.
 
மேலும், இந்த விவகாரத்தில், சோனியா காந்தி மீது அங்குள்ள மாகாண நீதிமன்றத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி பிரையன் கோகன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் உள்ள சம்பவங்களும் அமெரிக்காவுக்கு வெளியே நடைபெற்றுள்ளதாகக் கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
 
இதை எதிர்த்து சீக்கிய அமைப்பு, அங்குள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு, மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்தது.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து மறுவிசாரணை கோரி மீண்டும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக சீக்கிய அமைப்பு அறிவித்துள்ளது.