1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (11:08 IST)

மியான்மர் போராட்டத்தில் 138 பேர் படுகொலை! – ஐநா சபை கண்டனம்!

மியான்மரில் ராணுவ ஆட்சி ஏவப்பட்டுள்ள நிலையில் போராட்டம் நடத்திய மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் ஜனநாயக முறைப்படி அரசமைத்த ஆங் சான் சூகியின் ஆட்சியை கலைத்து ராணுவம் சர்வாதிகார ஆட்சி அமைத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் பலர் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் மேற்கொண்டு வரும் வன்முறை நடவடிக்கைகளால் மக்கள் பலர் பலியாகியுள்ளனர்.

மியான்மர் நிலவரம் குறித்து பேசியுள்ள ஐ.நா.சபை மியான்மரில் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 138 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் நடந்து வரும் மனித உரிமை மீறலை உலக நாட்டு உறுப்பினர் எதிர்த்து ஓரணியாக திரள வேண்டும் என ஐ.நா சபை செயலாளரின் செய்தி தொடர்பு துறை அதிகாரி ஸ்டெபானி டுஜாரிக் தெரிவித்துள்ளார்.