எவ்வளவு பணம் எண்ண முடிகிறதோ, அவ்வளவும் போனஸ்.. சீன நிறுவனத்தின் வித்தியாசமான அறிவிப்பு..!
சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று டேபிளில் கோடிக்கணக்கான பணத்தை வைத்து 15 நிமிடங்களில் உங்களால் எவ்வளவு பணத்தை எண்ண முடியுமோ, அவ்வளவு பணத்தையும் எண்ணி நீங்கள் எடுத்து போனசாக எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹெனான் மைன் கிரேன் என்ற நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வித்தியாசமான முறையில் போனஸ் வழங்க முடிவு செய்தது.
இதனை அடுத்து அந்நிறுவனம் ஒரு பெரிய மேஜையில் 70 கோடி ரூபாயை வைத்து அதன் பின்னர் தனது ஊழியர்களை அழைத்தது. அந்த டேபிளில் வைக்கப்பட்டுள்ள பணத்தை உங்களால் எவ்வளவு எண்ண முடியுமோ, அவ்வளவு எண்ணி அந்த பணம் முழுவதும் நீங்கள் போனஸாக வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு பணத்தை எண்ணினார்கள். பணத்தை எண்ணிய எல்லோருமே தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக போனஸ் கிடைத்ததாக கூறியுள்ளனர்.
ஒரு ஊழியர் 15 நிமிடங்களில் சுமார் ஒரு லட்சம் யுவான் வரை எண்ணியதாகவும் அவருக்கு அந்த பணம் போனஸாக கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Edited by Siva