1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 18 ஆகஸ்ட் 2018 (18:50 IST)

கேரளாவிற்கு உதவு முன்வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

கடந்த நூறு ஆண்டுகளில் மிக மோசமான வெள்ள பாதிப்பை சந்தித்து வருகிறது கேரளா. இந்நிலையில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுவது ஐக்கிய அரபு நாடுகளின் கடமை என குறிப்பிட்டுள்ளார் ஷேய்க் மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தும்.
ஐக்கிய அரபு நாடுகளின் வெற்றிக் கதைகளுக்கு பின்னால் கேரள மக்களின் பங்கு எப்போதுமே உண்டு. கேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக அதுவும் இந்த புனிதமான ஈத் அல் அதா நாள்களில் அவர்களுக்கு உதவ வேண்டிய சிறப்பு பொறுப்பு எங்களுக்கு உள்ளது என தமது ட்விட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார் ஐக்கிய அரபு நாடுகளின் துணை அதிபரும், பிரதமருமான மொஹம்மத் பின் ரஷீத் அல் மக்தும்.
 
கேரளா மாநிலம் மிகப்பெரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய அழிவை அங்கே ஏற்படுத்தியுள்ளது இவ்வெள்ளம். பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஈத் பெருநாள் வரவுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள நமது சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்ட நாம் மறந்துவிடக்கூடாது என மற்றொரு ட்வீட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
கேரளாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் இந்திய சமூகமும் ஒண்றிணைந்து உதவும். நங்கள் ஒரு குழுவை உடனடியாக உருவாக்கியுள்ளோம். இந்த முயற்சிக்கு ஒவ்வொருவரும் பங்களிக்கவேண்டும் என அவர் ட்விட்டர் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.