1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 27 ஜூன் 2015 (20:53 IST)

அல்ஷபாப் தாக்குதலில் 50 பேர் கொலை - ஐநா கண்டனம்

சோமாலியாவில் உள்ள ஆபிரிக்க ஒன்றியத்தின் இராணுவ முகாம் மீது நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஐநா சபையின் செயலாளர் நாயகம் பான் கீன் மூன் கண்டித்துள்ளார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த புருண்டி நாட்டின் அமைதிப்படையினருக்கு அறிக்கை ஒன்றில் அவர் அஞ்சலி தெரிவித்திருக்கிறார்.

இதில் உயிரிழந்தவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியமும் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.

சோமாலியத் தலைநகர் மொகாடிஷுவுடன் பாய்டோ நகரை இணைக்கும் சாலை ஒன்றில் அமைந்துள்ள இந்த இராணுவ தளத்தின் மீது இஸ்லாமியக் குழுவான அல் ஷபாப் மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 50 படையினர் பலியாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

முஹமது நபியின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தியமை என்று அல்ஷபாப் குழு வர்ணிக்கும் ஒன்றுக்காக பழிவாங்கும் நோக்கிலேயே இந்த தாக்குதலை தாம் மேற்கொண்டதாக அந்த குழு தெரிவித்திருக்கிறது.