வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (12:26 IST)

ரஷ்யா தாக்குதலால் 97 குழந்தைகள் உயிரிழப்பு! – உக்ரைன் அதிர்ச்சி தகவல்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 97 உக்ரைன் குழந்தைகள் இறந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 20 நாட்களை தாண்டியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. முக்கியமாக தலைநகர் கீவ்வில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளை ரஷ்யா தாக்கி வரும் நிலையில் கிவ்வில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் உக்ரைன் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா தெரிவித்தாலும் பின்னர் மக்கள் வாழும் குடியிருப்புகளிலும் தாக்குதல் நடத்த தொடங்கியதால் மக்கள் பலர் அகதிகளாக வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.