உக்ரைன் அதிபர் நடித்த டி.வி தொடர் மறு ஒளிபரப்பு! – நெட்பிளிக்ஸ் அறிவிப்பு!
உக்ரைன் போரால் அதிபர் ஜெலன்ஸ்கி உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள நிலையில் அவர் நடித்த டிவி தொடரை மீண்டும் நெட்ப்ளிக்ஸ் வெளியிடுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதியாக ரஷ்யாவுக்கு எதிராக போராடி வருகிறார். இதனால் உலக அளவில் ஜெலன்ஸ்கியின் பெயர் ட்ரெண்டாகியுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு திரைப்பட நடிகராக தனது வாழ்வை தொடங்கியவர். 2015-2019 ஆண்டுகளில் டி.வி.யில் ஒளிபரப்பான சர்வண்ட் ஆப் தி பீப்பிள் (மக்கள் சேவகன்) என்ற அரசியல் நையாண்டி டி.வி. தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இந்த தொடரில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, வாசில் பட்ரோவிச் கோலோபோர்ட்கோ என்ற பள்ளி ஆசிரியர் பாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் அரசியலில் இணைந்து அதிபரான பின் அந்த தொடர் நிறுத்தப்பட்டது.
தற்போது ஜெலன்ஸ்கி பெயர் புகழ் பெற்றுள்ளதால் அந்த தொடரை மீண்டும் வெளியிட உள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த தொடர் அமெரிக்க பிராந்தியங்களில் மட்டுமே ஒளிபரப்பாகும் என்பது கூடுதல் தகவல்.