1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 11 மார்ச் 2023 (16:40 IST)

ஆஸ்கர் விழாவில் உரை நிகழ்த்த உக்ரைன் அதிபருக்கு அனுமதி மறுப்பு~!

Volodymyr Zelenskyy
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, துவக்க உரை நிகழ்த்த  கோரிக்கை விடுத்தார். ஆனால், இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுளதாக தகவல் வெளியாகிறது.

ரஷிய ராணுவம் உக்ரைன் மீது போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்பபோர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில்  இன்னும் போர் முடியாமல், உக்கிரமடைந்து வருகிறது.

தற்போது, அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆயுதம் மற்றும் நிதியுதவியால் ரஷியாவை எதிர்த்து உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் 12 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்த நிகழ்வில், பல சினிமா கலைஞர்களும், இசைக் கலைஞர்களும்  கலந்துகொள்ளவுள்ளனர். இந்த விழாவின்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி துவக்க உரை நிகழ்த்த  கோரிக்கை விடுத்தார். ஆனால், இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுளதாகக தகவல் வெளியாகிறது.