ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (19:54 IST)

இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த உக்ரைன் எம்பி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உக்ரைன் நாட்டின் எம்பி நன்றி தெரிவித்துள்ளார். 
 
ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் ரஷ்ய நாட்டு அதிபர் புதினுடன் பேசிய மோடி, உக்ரைன் அதிபரிடமும் போர் குறித்து பேசினார் 
 
ஒரு நாள் போர் நிறுத்தம் செய்வதற்கு மோடி தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் எம்பி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் 
 
போர் நடந்து கொண்டிருக்கும் இரு நாட்டு அதிபர்களிடமும் பேசிய ஒரே தலைவர் மோடி தான் என்றும் குறிப்பாக உக்ரைன் நாட்டில் அதிபருக்கு தனது ஆறுதலை அவர் கூறியதாகவும் போர் நிறுத்தம் செய்வதற்கு இந்திய பிரதமர் தான் காரணம் என்றும் உக்ரைன் எம்பி தெரிவித்துள்ளார்.
 
மேலும் இந்தியா ஒரு மிகப்பெரிய மனித நேயமுள்ள நாடு என்றும் இந்திய நாட்டிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்