1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 12 டிசம்பர் 2015 (12:25 IST)

உக்ரைன் பாரளுமன்றத்தில் அமளி; எதிர்கட்சி எம்.பிக்கு அடி உதை : வீடியோ

உக்ரைன் நாட்டின் பாராளுமன்றத்தில், எதிர்கட்சி தலைவருக்கு அடி உதை விழுந்தது. அந்த நிகழ்ச்சி வீடியோவாக வெளிவந்திருக்கிறது.


 
 
உக்ரைன் நாட்டின் பாரளுமன்றத்தில், அந்த நாட்டின் பிரதமர் அர்செனி யாட்செனியுக் பேசிக்கொண்டிருக்கும் போது, எதிர்கட்சியை சேர்ந்த எம்பி ஓலே பர்னா பிரதமரை இடை மறித்து பல கேள்விகளை கேட்டார்.
 
யாட்செனியுக் அதற்கு பதிலளித்து கொண்டிருந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த பர்னா, எழுந்து சென்று, பிரதமரை பின்னாலிருந்து பிடித்து, இழுத்து, தூக்கி அவமரியாதை செய்தார். இதை கொண்டு கொதிப்படைந்த பிரதமரின் ஆதரவாளர்கள், பிரதமரை அவமரியாதை செய்த பர்னாவை கீழே தள்ளி அவரை தாக்கினார்கள். கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து அவரை அடித்தார்கள்.
 
அந்த விவகாரம் வீடியோவாக வெளிவந்துள்ளது. அதை நீங்களும் பாருங்கள்..