Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆடு மற்றும் மாட்டிறைச்சியில் ரூபாய் நோட்டு தயாரிப்பு: பிரிட்டன் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!!


Sugapriya Prakash| Last Modified வியாழன், 16 பிப்ரவரி 2017 (10:46 IST)
பிரிட்டன் நாட்டில் காகிதத்தில் அச்சடிக்கப்படும் பவுண்டு நோட்டுகளை ஒழித்துவிட்டு, பிளாஸ்டிக் கலந்த பாலிமர் நோட்டுகளை மக்களிடையே புழக்கத்தில்விட அந்நாட்டின் மத்திய வங்கியான இங்கிலாந்து வங்கி தீர்மானித்தது.

 
 
இதன் முதல்கட்டமாக, ஐந்து பவுண்டுகள் முகமதிப்பு கொண்ட புதிய பாலிமர் நோட்டுகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நோட்டுகளை தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருளுடன் ஆடு மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பால் உருவாகப்பட்ட ‘டால்லோ’ என்ற பொருள்.
 
இதற்கு அந்நாட்டில் வாழும் இந்து மக்கள் மற்றும் அசைவத்தை துறந்து, சைவ உணவை விரும்பி சாப்பிடும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
 
சர்ச்சைக்குரிய இந்த நோட்டுகளை இங்கிலாந்து மத்திய வங்கி திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஆனால், காகிதத்தில் அச்சடிக்கப்படும் நோட்டுகளின் ஆயுட்காலம் இரண்டாண்டுகளாக இருக்கும் நிலையில், புதிய பாலிமர் நோட்டுகளின் ஆயுட்காலம் சுமார் ஐந்தாண்டுகளாக கணிக்கப்பட்டுள்ளதால், இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க அரசு முன்வரவில்லை என கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :