முதலைக்குட்டிக்கு பீர் ஊட்டி விட்டவர் கைது! – வைரலான வீடியோவால் நடவடிக்கை!

crocodile
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (15:53 IST)
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் முதலைக்குட்டியை பிடித்து அதற்கு பீரை ஊட்டிவிட்ட வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர்கள் டிமோத்தி கெப்கே மற்றும் நோவா ஆஸ்போர்ன். அங்குள்ள பால்ம் சிட்டி பகுதியில் ஒரு சிறிய முதலை குட்டியை கண்டெடுத்திருக்கிறார்கள். அப்போது நிறையவே குடித்திருந்த அவர்கள் அந்த முதலைக்குட்டியை வைத்து விளையாட முயற்சி செய்திருக்கிறார்கள். அது டிமோத்தியின் கையை பலமாக கடித்திருக்கிறது.

அதனால் அவர்கள் அந்த முதலைக்குட்டியை பிடித்து வலுக்கட்டாயமாக அதன் வாயில் பீரை ஊற்றி விட்டிருக்கிறார்கள். இதை ஆஸ்போர்ன் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதை கண்ட பலர் அவர்கள் செய்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் புகார் அளித்ததன் பேரில் அந்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

அவர்கள் முதலைக்குட்டிக்கு பீரை ஊற்றி விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த முதலைக்குட்டி நல்லபடியாக இருப்பதாக அந்த பகுதி விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :