31 கிலோ எடையுள்ள 18 மாத குழந்தை!!
துருக்கியை சேர்ந்த யாகிஸ் பெக்டெ எனும் சிறுவன் பிறந்து 18 மாதங்கள் ஆன நிலையில் சிறுவனின் எடை 31 கிலோவாக உள்ளது.
மேலும், மாதம் 2 கிலோ எடை அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. சிறுவனுக்கு சரியான தொட்டில், டயாப்பர் கூட கிடைக்காமல் தவிப்பதாக அவனது பெற்றோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் எடை மாதந்தோறும் அதிகரிக்காமல் இருக்க 2.5 லட்ச ரூபாய் செலவாகிறது என்றும் இதனால் துருக்கி அதிபர் எர்டோகனிடன் முறையிட உள்ளதாகவும் கூறுகின்றனர்.
உணவுக்கும் உடல் எடைக்கும் சம்பந்தமில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் உடலில் உள்ள குறைபாடு என்ன என்று எந்த மருத்துவரும் சரியாக சொல்வதில்லை என்றும் பெற்றோர் கூறியுள்ளனர்.