திங்கள், 4 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (13:42 IST)

அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிக்கிறது – ட்ரம்ப் எச்சரிக்கை !

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் டிவிட்டரில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே பிற நாடுகளுடன் வர்த்தகப் போர் மற்றும் வெளிநாட்டவர்க்கு விசா வழங்க மறுத்தல் அகதிகள் கட்டாய வெளியேற்றம் என தடாலடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.  மேலும் நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கே அதிக முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகவரியினை விதித்துள்ளார். இதில் இந்தியப் பொருட்களும் அடக்கம். அதற்குப் பதிலடி தரும் விதமாக இந்திய அரசும் 29 அமெரிக்கப் பொருட்களுக்குக் கூடுதல் வரி விதித்தது.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அதனால் இரு நாட்டுக்கும் இடையில் சுமூக உறவு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘அமெரிக்கா மீது தொடர்ந்து அதிக வரிகளை இந்திய அரசு விதித்து வருகிறது. இது சம்மந்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேச விரும்புகிறேன். ’ என மிரட்டும் தொனியில் கூறியுள்ளார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் டொனால்டு ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் இறுதியில் சந்தித்துப் பேச இருக்கிறார்.