1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (15:10 IST)

போலி செய்தி வெளியிட்ட பத்திரிக்கைக்கு விருது வழங்கிய டிரம்ப்!!

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து அவரை பற்றிய பல சர்ச்சைக்குறிய செய்திகள் அமெரிக்க ஊடங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளியாகிய வண்ணமே உள்ளது. சில நேரங்களில் ஊடங்களின் விவாதப்பொருளாவும் டிரம்ப் உருவெடுத்தார். 
 
அதே சமயம் ஊடகங்களையும் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். குறிப்பாக சிஎன்என், தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய செய்தி நிறுவனம் மற்றும் பத்திரிக்கை மீது டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். 
 
இந்நிலையில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த வருடத்தின் நேர்மையற்ற, ஊழல் நிறைந்த ஊடகங்களுக்கான விருதை அறிவிக்க இருக்கிறேன். இந்த விருதுகள் பொய் செய்திகள், நேர்மையற்ற, தரமற்ற செய்திகளின் அடிப்படையில் வழக்கப்படுகிறது என பதிவிட்டிருந்தார்.
 
கூறியது போல விருதுகளை வழங்கியும் உள்ளார். அவை பின்வருமாறு, பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு போலி செய்திகளுக்கான விருது வழக்கப்பட்டுள்ளது.
 
நேர்மையற்ற, பொய் செய்திகள் போன்ற இதர பிரிவுகளின் முறையே ஏபிசி, சிஎன்என், தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி டிரம்ப்பை எதிர்த்து செய்திகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.