வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2020 (17:08 IST)

டிரம்பை விவாகரத்து செய்கிறாரா மெலனியா?

டிரம்பை விவாகரத்து செய்கிறாரா மெலனியா?
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை அடைந்த டிரம்பை அவரது மனைவி மெலனியா விரைவில் விவாகரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அமெரிக்க அதிபராக இருக்கும் போதே டிரம்ப், மெலனியா ஆகிய இருவரும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இருவருக்குமிடையே 25 வயது வித்தியாசம் என்பதால் தலைமுறை இடைவெளி இருந்ததாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் இருவருக்கும் இடையே திருமணம் நடந்து பதினைந்து ஆண்டுகளாகியும் இருவரும் கருத்து வேறுபாடுகள் உடனே குடும்பம் நடத்தி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெறுவார் என்று உறுதியாக மெலனியா நம்பியதாக ஆனால் அவர் தோல்வி அடைந்து விட்டதால் அவரை விட்டு பிரிந்து விவாகரத்து செய்து விடுவார் என்றும் கூறப்படுகிறது இது குறித்த செய்திகள் அமெரிக்க ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆனால் மெலனியா விவாகரத்து முடிவு குறித்து எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது