வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 ஜூலை 2020 (07:18 IST)

உலக கொரோனா பாதிப்பு 1.71 கோடி: அமெரிக்காவில் ஒரே நாளில் 66,405 பேருக்கு பாதிப்பு

உலகம் முழுவதும் 1.71 கோடி பேர் அதாவது 17,171,292 பேர்கள் கொரோனாவிற்கு பாதிப்பு அடைந்துள்ளனர் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் 6.69 லட்சம் பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர் என்றும், 1.06 கோடி பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 66,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றும் இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரக்ளின் எண்ணிக்கை மொத்தம் 45.67 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிரேசிலில் ஒரே நாளில் கொரோனாவிற்கு 70,869 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், பிரேசிலில் 25.55 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்தம் 1,584,384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் 35,003 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 828,990 என்பதும், தென்னாப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 471,123 என்பதும், மெக்சிகோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 402,697 என்பதும், பெருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 395,005என்பதும், சிலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 351,575 என்பதும், ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 329,721 என்பதும் குறிப்பிடத்தக்கது