திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (09:14 IST)

போரை நிறுத்தாத ரஷ்யா.. சேவையை நிறுத்திய டிக்டாக்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷ்யாவில் தனது சேவையை டிக்டாக் நிறுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளன.

அதை தொடர்ந்து பிரபல மின்பொருள் உற்பத்தி நிறுவனங்களான இண்டெல், ஹெச்.பி, ஆப்பிள், சாம்சங், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் விற்பனையை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளன. பணபரிமாற்ற கிரெடிட், டெபிட் கார்டுகளை வழங்கும் விசா, மாஸ்டர்கார்டு நிறுவனங்களும் தங்கள் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்துவதாக அறிவித்துள்ளன.

அதை தொடர்ந்து தற்போது ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிக்டாக் நிறுவனம் தனது சேவை மற்றும் ஒளிபரப்பை ரஷ்யாவில் நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் பல சமூக வலைதளங்களும் ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்துவதாக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.