1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (15:53 IST)

2023ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இயற்பியலுக்கு மூன்று பேர் நோபல் பரிசு பெற்றது போலவே வேதியலுக்கும் மூன்று பேர் நோபல் பரிசு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கவே. 
 
2023 ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு, குவாண்டம் புள்ளிகள் தொடர்பான ஆய்வுக்காக  பணிபுரிந்த 3 விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளது 
 
மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ், அலெக்சி எகிமோவா ஆகிய மூவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது 
 
 வேதியியலுக்கான  நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கிடைத்துள்ளதை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
Edited by Siva