மூன்று ஆண்கள் திருமணம் - கொலம்பியாவில் வினோதம்


Murugan| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (13:09 IST)
மூன்று ஆண்கள் திருமணம் செய்து கொள்ளப்போகிற வினோத சம்பவம் விரைவில் கொலம்பிய நாட்டில் அரங்கேறவுள்ளது.

 

 
ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்வது என்பது இயற்கையானது. ஆனால், பல வெளிநாடுகளில் இயற்கைக்கு எதிராக ஆணும், மற்றொரு ஆணும் திருமணம் செய்து கொள்வது அல்லது ஒரு பெண் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்பது பல வருடங்களாக நடந்து வருகிறது. 
 
அந்த நாடுகளின் சட்டங்கள் அதை அனுமதிக்கின்றனர். இந்நிலையில், முக்கோண காதல் கதை என்பது போல், கொலம்பியாவில் ஒரு முக்கோண திருமணம் நடைபெறவுள்ளது. அதாவது மூன்று ஆண்கள் ஒன்றாக சேர்ந்து திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
 
மானுவேல், விக்டர் ஹகோ ப்ரடா, அலெஜாண்ட்ரோ ஆகிய மூவரும் ஒன்றாக திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், மொத்தம் நான்கு பேர் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். ஆனால், அதில் அலெக்ஸ் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தர். தற்போது மீதமுள்ள மூவரும் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள்.
 
இப்படி ஆண்கள் மூவர் திருமணம் செய்து கொள்வதற்கு கொலம்பிய சட்டம் சமீபத்தில் அனுமதி அளித்தது. எனவே, விரைவில் அவர்கள் மூவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :