புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (20:35 IST)

எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு இதுவே முடிவு- அமெரிக்க அதிபர் பைடன்

மக்களுக்கு அச்சுறுத்தல் உண்டாக்கினால் அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அல்-கொய்தா தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி என்பவர் நேற்று கொல்லப்பட்டதாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த ஜோ பைடன் கூறியதாவது:

அமெரிக்க ராணுவத்தினர்  நடத்திய ஆளில்லா விமானம் தாக்குதலில் அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாரி கொல்லப்பட்டார்.

இதன்மூலம் , செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானோர் குடும்பங்களுக்கு தற்போது நீதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தல் உண்டாக்கினால் அமெரிக்கா உங்களை கண்டுபிடித்து தண்டிக்கும் என்றும், இரட்டை கோபுர தாக்குதலை அமெரிக்கர்கள் மறக்க மாட்டோம் என்றும்  எங்களை தாக்க நினைப்பவர்களுக்கு இதுவே முடிவு எனத் தெரிவித்துள்ளார்.