திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (09:06 IST)

தினசரி 1 மில்லியன் கோவிட் தொற்று: சீனாவின் இந்த நகரத்தில் பீதி!

ஷாங்காய்க்கு அருகிலுள்ள ஒரு பெரிய தொழில்துறை மாகாணமான சீனாவின் ஜெஜியாங், தினசரி ஒரு மில்லியன் புதிய தொற்று கண்டறியப்படுகிறது.


சீனா முழுவதும் பதிவு செய்யப்பட்ட அதிகப்படியான கொரோனா தொற்றுகள் இருந்தாலும் கடந்த ஐந்து நாட்களுக்கு சீனாவின் நிலப்பரப்பில் கொரோனா இறப்புகள் எதுவும் இல்லை என்று சீனாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவ்ல் நோய்த்தொற்று உச்சம் ஜெஜியாங்கிற்கு முன்னதாகவே வந்து சேரும் என்றும் புத்தாண்டு தினத்தன்று உயர்ந்த நிலைக்குள் நுழையும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் செல்லும் நாட்களில் தற்போது ஒரு மில்லியனாக இருக்கும் தினசரி புதிய தொற்று எண்ணிக்கை இரண்டு மில்லியனாக அதிகரிக்கூடும் என்று ஜெஜியாங் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

65.4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஜெஜியாங் மாகாணத்தின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 13,583 நோய்த்தொற்றுகளில் ஒரு நோயாளிக்கு கடுமையான அறிகுறிகள் இருப்பதாகவும், அதே நேரத்தில் 242 கடுமையான மற்றும் சிக்கலான நிலைமையில் இருப்பதாகவும் தகவல்.

கொரோனா தொற்று நோயின் மிகவும் ஆபத்தான வாரங்களுக்குள் சீனா நுழைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுகள் பரவுவதை மெதுவாக்க அதிகாரிகள் இப்போது வரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. இதனால் சீனாவின் சுகாதார அமைப்பு மிகப்பெரிய சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.