திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (19:43 IST)

80 அடி உயரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி கிழே விழுந்த பெண்! பரவலாகும் வீடியோ

மெக்சிகோவில் உள்ள பிரபல கல்லூரியில் படித்து வருபவர் அலெக்சா தெரசா (23). இவர் தனது வீடு இருக்கும் 6 வது மாடியில் உள்ள பால்கனியில் யோகா பயிற்சி மேற்கொண்டார்.
இன்னும் கடினமாக யோகா பயிற்சி செய்யப்போவதாக கூறி, மாடிச் சுவரின் கைப்பியி விளிம்பில் தலைகீழாகத் தொங்கியடி இருந்தவர், பின்னர் கைநழுவி தலைகீழாகத் தொங்கிய நிலையில் இருந்து கீழே விழுந்தார். இதை அவரது தோழி புகைப்படம் எடுக்க இந்தக் காட்சிகள் சமூகாலௌதளன்களில் வைரலாகிவருகிறது.
 
தலைகீழாக விழுந்த தெரசாவின் உடலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவரது உடலில் 110 எலும்புகள் உடைந்துள்ளதாகவும், இரு கைகள், கால்கள்ம் இடுப்பு , தசை என பல இடங்களில் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கோரிக்கையின் பேரில் தெரசாவுக்கு ரத்ததானம் வழங்க பலர் முன்வந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.