வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (01:48 IST)

மோடியின் அரசை மிகக் கடுமையாக விமர்சித்த அமெரிக்க பத்திரிகைகள்

மோடி அரசில் உள்ளவர்கள் சூப்பர் ஹீரோக்களாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், உண்மையில், சூப்பர் ஹீரோக்களாக அவர்கள் எப்போதும் இருந்ததில்லை என்று, அமெரிக்க பத்திரிகை மோடி அரசு மீது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளது.
 
மோடி தலைமையிலான பாஜக ஆட்சி ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், " மோடியிடம் பேச்சுதான் அதிகம் செயலில் ஒன்றுமில்லை!" என்று கடுமையாக விமர்சித்துள்ளன.
 
ஓராண்டை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல சாதாரண திட்டங்களை ஊதி பெரிதாக்கி காட்டி,  பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல காட்டுகிறது. ஆனால் உண்மையில் நிலைமை அப்படியில்லை என்றும் அந்த பத்திரிகைகள் விமர்சித்துள்ளன.
 
அமெரிக்காவின் பிரபல 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற பத்திரிகை, "எதிர்பார்ப்புகள் முடிவடைந்துவிட்டன ஆனால் சவால்கள் அதிகரித்துள்ளன!" என்று தெரிவித்துள்ளது. 
 
அந்தச் செய்தியில், "இந்தியாவில் உற்பத்தி' என்பதை உரக்க கோஷமிட்டாலும் உண்மை நிலவரம் கலவரமாகவே உள்ளது. ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. மாறாக தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஏற்றுமதி குறைந்தே போயிருந்தது" என்று மேலும் கூறப்பட்டுள்ளது.  
 
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, " நிறைய உறுதிமொழி கொடுத்தாகிவிட்டது; இனிமேல்தான் மோடி உண்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலக நாடுகள் இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதார நாடாக பார்க்கின்றன. ஆனால் இந்தியாவின் உள்நாட்டு நிலைமை இன்னமும் மோசமாகத் தான் உள்ளது. வேலைவாய்ப்பு வளர்ச்சி குறைவாகவே உள்ளது. கொஞ்ச காலத்திற்கு பொறுத்திருப்போம் என, புதிய தொழில்கள் காத்திருக்கின்றன.
 
எதிர்க்கட்சிகள், மோடியையும், மோடி தலைமையிலான அரசையும் ஏழைகளுக்கு எதிரான ஆட்சி, விவசாயிகளுக்கு எதிரான அரசு என  தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. மோடி அரசு மீதான, 'இமேஜ்' அவர்களின் உண்மையான தகுதியை விட அதிகமாக உள்ளது. அமைச்சர்கள், சூப்பர் ஹீரோக்களாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், உண்மையில், சூப்பர் ஹீரோக்களாக அவர்கள் எப்போதும் இருந்ததில்லை" என்று தெரிவித்துள்ளது.