1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (19:21 IST)

கொலைப் பசியில் தன் வாலை தானே விழுங்கிய பாம்பு...

அமெரிக்காவில் பசியில் இருந்த பாம்பு ஒன்று, அதன் வால் பகுதியை தானே விழுங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்கா நாட்டில் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிரண்ட்  என்ற சரணாலயத்தில்  கிங் ஸ்னேக் என்ற வகைப் பாம்பு ஒன்று பராமரிக்கப்பட்டு வந்தது. இந்தப் பாம்புக்கு கடும் பசி ஏற்பட்டது.  இந்நிலையில் தனது வால் பகுதியைக் கடித்து சாப்பிட தொடங்கியது.
 
இதனைப் பார்த்த சரணாலயத்தில் பணியாற்றிய ஊழியர் ஜெஸ்ஸி ரோத்தக்கர் என்பவர்,  பாம்பின் மூக்கு பகுதியில் லேசாக தட்டிக்கொடுத்து, அது தன் வாயில் விழுங்கிய அதன் வாலை வெளியே எடுத்தார். 

தற்பொழுது  இந்த வீடியோ காட்சியை ரோத்தக்கர் தன் பேஸ்புக் பக்கத்தில் கிங் ஸ்நேக் வகை பாம்பு இது என்றும், இது பிற பாம்புகளை விழுங்கும்  உண்ணக்கூடியது என்றும், சில நேரம் அதன் வால் பகுதியை வேறு பாம்பின் மிச்ச பகுதி என தவறுதலாக நினைத்து வி்ழுங்கும் எனவும் தற்போது இது தன் வாலை விழுங்கிய போது அதன் கவனத்தை திசை திருப்பி,அந்த வாலை வெளியே எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.