குழந்தையை வேண்டுமென்றே விமான நிலையத்தில் விட்டு சென்ற பெற்றோர்: அதிர்ச்சி சம்பவம்
குழந்தைக்கு டிக்கெட் எடுக்க விமான நிலைய அதிகாரிகள் வலியுறுத்தியதால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு செல்ல முயன்ற பெற்றோர் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவில் என்ற விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் பெற்றோர் வந்தனர். அப்போது குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துனர்.
இதனை அடுத்து வாக்குவாதம் செய்த அந்த தம்பதிகள் குழந்தையை விமான நிலையத்திலேயே நைசாக விட்டுவிட்டு விமான விமானத்தில் ஏற முயன்றதாக தெரிகிறது.
விமான நிலைய அதிகாரி ஒருவர் இதனை கவனித்து உடனடியாக காவல்துறைக்கு புகார் அளித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து பெற்றோரை விசாரணை செய்து வருகின்றனர். குழந்தையை விட்டுச் செல்ல முயன்ற கல்நெஞ்சக்கார பெற்றோர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
Edited by Siva