குழந்தையை கொன்று 3 மாதங்கள் சடலத்துடன் வாழ்ந்த அமெரிக்கா தாய்

Ashok| Last Updated: ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2015 (12:15 IST)
அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது குழந்தையை கொலை செய்து, அந்த பிணத்துடன் 3 மாதம் வாழ்ந்துள்ளார்.
அமெரிக்காவின், நியூயார்க் நகரில் அருகே டாவியா என்ற இடத்தில் வசித்து வந்த கிறிஸ்டினாவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்ததுள்ளது. அந்த குழந்தையை கிறிஸ்டினா கொன்று விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில்
கொலை செய்யப்பட்ட குழந்தையை வீட்டில் வைத்துள்ளார். மேலும், தன்னுடைய குழந்தையின் சடலத்துடன் கிறிஸ்டினா 3 மாதங்கள் அவரது ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த தகவல் தெரிந்ததும், நியூயார்க்
போலீசார் கிரிஸ்டினாவை கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னுடைய குழந்தையை எதற்காக கொலை செய்தார், சடலத்துடன் ஏன் 3 மாதங்கள் வாழ்ந்தார் .என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும் என நியூயார்க் செய்தியாளர்களிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :