வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:20 IST)

'மிக மிக சோம்பேறி குடிமகன்' போட்டி.. வென்றால் ரூ.80 ஆயிரம் பரிசு!

laziest citizen
ஐரோப்பியாவில் உள்ள நாடு மாண்டெனெக்ரோ. இங்கு   யார் அதிக 'சோம்பேறி குடிமகன்' என்ற  போட்டி   நடைபெற்று வருகிறது.

ஐரோப்பியாவில் உள்ள  நாடு மாண்டெனெக்ரோ. இந்த நாட்டில், விசித்திரமான ஒரு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது. 'மிக மிக சோம்பேறி குடிமகன்' என்ற போட்டி, அங்கு நடந்து வரும் நிலையில், இன்றோடு 26 வது நாளை எட்டியுள்ளது.

இப்போட்டியில்,  21 போட்டியாளர்கள், 263 மணி  நேரத்தைக் கடந்து போட்டியில் தொடர்ந்துள்ளனர்.

இப்போட்டியில், 24 மணி நேரமும் கட்டிலில் படுத்தே இருக்க வேண்டும். 8 மணி நேரத்திற்கு ஒருமுறை 10 நிமிடம் கழிவறைக்கு செல்லலாம், படுத்தபடியே புத்தகம் படிக்கலாம், செல்போன் பார்க்கலாம் ஆனால், உட்காரவோ, எழுந்து நிற்கவோ கூடாது என்று விதிகள் உள்ளது இதில், முதலிடம் பெற்றால் ரூ.80 ஆயிரம் பணம் பரிசாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.