திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 1 மார்ச் 2023 (23:09 IST)

மாடல் அழகியை கொன்று பிரிட்ஜில் உடலும், பானையில் தலையும் வைத்த கணவன் கைது !

abby choi
ஹாங்காங் நாட்டில் கொல்லப்பட்ட மாடல் அழகியின் தலை பானையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங் நாட்டில் பிரபல அழகியாக இருப்பவர் அபிசோய்(28).  இவர் சமூக வலைதள பக்கத்தில் லட்சக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர்.

சமீபத்தில்,அபிசோய்க்கு திருமணம் ஆகி 1 மகனும் மகளும் இருக்கின்றனர். தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  அண்மையில் மாடல் அழகி அபிசோய்யை காணவில்லை. இதுகுறித்து போலீஸார் அவரது மாமியார் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர்.

அதில், அபிசோய் வெட்டப்பட்டு, குளிர்சாதனப் பெட்டியில் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தலை ஒரு சூப்கள் நிறைந்த இரு பெரிய பானையில் இருந்துள்ளது. இதைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த வழக்கில் இதுவரை அபிசோயின் கணவன், அவரது அம்மா, அப்பா உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அவர்களின் விசாரிக்கப்பட்டதி, அபிசோயை காரில் கடத்தி அவர் மயக்கம் ஆகிவிட்ட நிலையில், துண்டுதுண்டாக அவர் உடலை வெட்டி, பிரிஜ்ஜில் மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.