1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 31 டிசம்பர் 2019 (18:05 IST)

முதன்முதலில் புத்தாண்டை வரவேற்ற நாடு ! மக்கள் உற்சாகம் !

2020 ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் எல்லோரும் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் முதன்முறையாக இந்தப் புத்தாண்டை வரவேற்ற நாடு எனும் சிறப்பை நியூசிலாந்து மற்றும் பசிபிக் தீவுகள்  பெற்றுள்ளது.
இந்தப் புத்தாண்டை முதன்முறையாக பசிபிக் தீவில் உள்ள சிறு நாடான கிரிபட்டி, டோங்கா,சமோவா ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
 
இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து நாட்டிலும் பிறந்தது. அங்கு மகிழ்ச்சியுடன் கொண்டாடி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
 
நள்ளிரவு 12:00 மணிக்கு, இந்தியாவில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படும்.
 
நம் இந்திய நேரப்படி, நள்ளிரவு ஜனவரி 1ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு, பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.