1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2015 (19:03 IST)

படிப்பில் பயங்கரமாக அசத்தும் 19 மாத சுட்டிக் குழந்தை

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள 19 மாத குழந்தை ஒன்று ஆங்கில எழுத்துக்களை எழுத்துக் கூட்டி படிப்பதும், எண்களை பிழையில்லாமல் எண்ணுவதிலும் படு சுட்டியாக இருந்து வருகிறார்.
 

 
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள கார்டா என்ற 19 மாத குழந்தை ஆங்கில எழுத்துக்களை சரளமாக சொல்லி அசத்துகிறது.
 
அதே நேரம் 300க்கும் மேற்பட்ட வார்த்தைகளை ஆங்கிலத்தில் எழுத்து கூட்டி பிழையில்லாமல் படித்து அசத்துகிறது. அதேபோல் சுமார் 50 வரையிலான எண்களை தவறில்லாமல் எண்ணி பார்ப்போரை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகிறது.
 
இது குறித்து கார்டாவின் பெற்றோர் லடாயோ கூறியிருப்பதாவது: கார்டருக்கு ஏ, பி, சி தெரியும், அதனால், எழுத்துக்களை எழுதும்போது அதனை எழுத்துக்கூட்டி படிக்கிறான்.
 
மேலும், ஏதேனும் வெளி இடங்களுக்குச் சென்றால் அங்கே வைக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களையும் முயற்சி செய்தி படிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளான்.
 
அவனுக்கு 7 மாதமாக இருந்தபோது எழுத்துக்களை நினைவில் வைத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டான். சுமார் 12 மாதமாக இருக்கும்போது ஆங்கில சொற்களை வாய்விட்டு சொல்லவும் ஆரம்பித்து விட்டான், தற்போது படிப்படியாக 300 வார்த்தைகள்வரை எழுத்துக்கூட்டி படித்து வருகிறான்.
 
சுமார் 50 வரை எண்களை தவறில்லாமல் எண்ணி அசத்துகிறான். இது எங்களுக்கே அதிசயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். பொதுவாக ஒரு குழந்தை மூன்று ஆண்டுகளுக்கு பின்னர்தான் எழுத்துக்களை எழுத்து கூட்டி வாசித்து பழகும்.
 
ஆனால் சாரசரி குழந்தைகள் போல் இன்றி கார்டா மிகவும் அறிவுக் கூர்மையுடன் இருப்பதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்.