வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 மே 2022 (10:55 IST)

துப்பாக்கிசூட்டின் போது நடந்தது என்ன..? – குண்டடி பட்ட சிறுவன் சொன்ன தகவல்கள்!

அமெரிக்காவின் டெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் பலர் உயிரிழந்த நிலையில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து உயிர்பிழைத்த மாணவர் பேசியுள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பள்ளி ஒன்றில் புகுந்த 18 நபர் துப்பாக்கியால் அங்குள்ள மாணவர்களை சுட்டதில், ஆசிரியர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதை தொடர்ந்து அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் அப்பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து குண்டடிபட்ட சிறுவன் ஒருவன் பேசியுள்ளான். அந்த சிறுவன் கூறுகையில் “துப்பாக்கிசூடு நடத்துவதற்கு முன் அந்த நபர் “நீங்கள் அனைவடும் சாக போகிறீர்கள்” என்று சொன்னார். முதலில் எங்கள் ஆசிரியரை சுட்டார். அதன்பிறகு குழந்தைகள் மீது சுட்டார். இறுதியாக என்னை சுட்டபோது எனது காலில் தோட்டா பாய்ந்தது” என்று கூறியுள்ளார்.