1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (11:30 IST)

Tesla Baby: வைராலாகும் குழந்தையும் ஆட்டோ பைலட் மோட் பிரசவமும்!

டெஸ்லா காரில் பயணித்த போது கர்ப்பிணி மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் ஆட்டோ பைலட் மோடில் மாற்றி பிரசவம் பார்த்துள்ளார் கணவர். 

 
கோடிகள் மதிப்புள்ள டெஸ்லா நிறுவனத்தின் கார்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதில் ஒன்று ஆட்டோ பைலட் (தன்னியக்க பைலட்). இதில் கார்கள் ஓட்டுனர்கள் இயக்காமல் தானாகவே இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பென்சில்வேனியாவைச் சேர்ந்த தம்பதி கீட்டிங் ஷெர்ரி - அயர்ன் ஷெர்ரி. இதில் அயர்ன் ஷெர்ரி கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் மனைவியை காரில் அழைத்து சென்றுள்ளார். அப்போது கார் போக்குவரத்து நெரிலில் சிக்கி கொண்டுள்ளது. 
 
இதனால் மருத்துவமனை செல்ல தாமதத்தை தம்பதி உணர்ந்தனர். இதனால் கணவர் கீட்டிங் ஷெர்ரி காரை ஆட்டோ பைலட் முறைக்கு மாற்றி தனது மனைவியின் பிரசவத்திற்கு உதவியுள்ளார். பின்னர் டெஸ்லா காரில் இவர்களுக்கு அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது.