1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 நவம்பர் 2021 (16:21 IST)

அரசியல் பிரபலம் மீது டென்னிஸ் வீராங்கனை பாலியல் புகார்!

பிரபல அரசியல்வாதி மீது டென்னிஸ் வீராங்கனை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையான சீனாவை சேர்ந்த வீராங்கனை ஒருவர் மீடூ பாணியில் சமூகவலைதளத்தில் பாலியல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் தான் சின்ன வயதில் பாலியல் கொடுமைகள் அனுபவித்ததாகவும் தனக்கு இழைத்த கொடுமைகளை பல்வேறு காரணங்களால் வெளியே சொல்ல முடியாமல் போய்விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
சீனாவின் மூத்த துணை அதிபராகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும் செல்வாக்குடன் விளங்கி வரும் ஒருவர் மீது தான் அவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருந்த டென்னிஸ் வீராங்கனை ஒருவர் சீனாவின் பிரபல அரசியல்வாதி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி உள்ளது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது