1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 30 மார்ச் 2015 (12:27 IST)

சச்சினின் மெழுகு சிலை சிட்னி அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றம்

இந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர்  சச்சின் டெண்டுல்கரின் மெழுகு சிலை சிட்னி அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
 
பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ளன. 


 
 
இந்த மியூசியத்தில் பல துறைகளைச் சேர்ந்த இந்திய பிரபலங்ளின் சிலைகளும் உள்ளன. அந்த வகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சிலையும் இங்கு வைக்கப்பட்டது. 
 
சிட்னி நகருக்கு சுற்றுலா செல்லும் பலரும் சச்சினின் முழு உருவ மெழுகுச் சிலையின் அருகில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில், தற்போது சச்சினின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
 
அந்த சிலைக்கு உலகக் கோப்பை T20 போட்டியின்போது விளையாட்டு வீரர்கள் அணிந்த சீருடை அணிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் சச்சின் T 20 போட்டியில் விளையாடியது இல்லை.
 
இந்த விபரம் தெரிய வந்ததால், அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு பாங்காக் நகருக்கு கொண்டு செல்லப்பட்டதாக மேடம் டுஸாட்ஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.