வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (15:26 IST)

டெலிகிராம் சி.இ.ஓ. கைதுக்கு இளம்பெண் காரணமா? காதலி போல் நடித்த உளவாளி?

டெலிகிராம் சி.இ.ஓ.  கைதுக்கு அவரது காதலி காரணம் என்றும் அவரே உளவாளியாக இருந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பொவல் துரோவ்  என்பவர் பிரான்ஸ் போலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் டெலிகிராம் செயலியை முடக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது . மேலும் இந்தியா உள்பட பல நாடுகள் இந்த செயலிக்கு தடை விதிக்க பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜர்பைஜான் நாட்டில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு வந்த டெலிகிராம் சி.இ.ஓவை பிரான்ஸ் காவல்துறை கைது செய்த நிலையில், அவர் கைது செய்யப்பட்ட போது அவருடன் ஜூலி பாவிலோவா என்ற இளம் பெண்ணும் இருந்ததாக தெரிகிறது. இவர் பாவெல் துரோவின் காதலி என்று கூறப்படும் நிலையில் தற்போது அவர் எங்கே இருக்கிறார்? என்ன ஆனார் என்று தெரியவில்லை.

ஆனால் ஜூலி பாவிலோவாவும் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அவர் காதலி போல் நடித்து உளவாளி வேலை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. எனவே டெலிகிராம் சிஇஓ கைதுக்கு அவரும் ஒரு காரணம் என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் எல்லைக்குள் வருவதை அவரது காதலி ஜூலி பாவிலோவா தான் உறுதி செய்ததாகவும் அதன் பின்னரே அவரை குறிவைத்து பிரான்ஸ் போலீசார் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran