பள்ளி மாணவனுடன் உடலுறவு: கர்ப்பமான ஆசிரியருக்கு சிறை தண்டனை!

பள்ளி மாணவனுடன் உடலுறவு: கர்ப்பமான ஆசிரியருக்கு சிறை தண்டனை!


Caston| Last Modified சனி, 14 ஜனவரி 2017 (16:30 IST)
அமெரிக்காவில் ஆசிரியர் ஒருவர் பள்ளி சிறுவன் ஒருவனுடன் நெருக்கம் ஏற்பட்டு அந்த மாணவனுடன் உடலுறவு கொண்டுள்ளார். இதனால் அந்த ஆசிரியர் கர்ப்பமாக தற்போது அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

 
 
அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரில் தனியார் பள்ளி ஒன்றில் அலெக்ஸாண்ட்ரியா வெரா என்ற 24 வயதான பெண் ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு தனது வகுப்பில் உள்ள 13 வயது மாணவன் ஒருவனுடன் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.
 
அந்த ஆசிரியரும், மாணவனும் பலமுறை உடலுறவு கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக அந்த ஆசிரியர் கர்ப்பமடைந்துளார். இதனால் ஆசிரியரும், மாணவனும் உடலுறவு கொண்டது வெளியே தெரியவந்தது.
 
சிறுவனை தவறான வழியில் வழிநடத்திய குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஆசிரியருக்கு நீதிபதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :