வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 24 மே 2016 (16:36 IST)

சரக்கடித்து விட்டு பாராளுமன்றத்தில் பேசிய மந்திரி டிஸ்மிஸ்

எம்.பி.க்கள் கேட்ட கேள்விகளுக்கு மதுபோதையில் பதிலளித்த உள்துறை மந்திரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.


 

 
இந்தியாவிலா என்று கேட்கிறீர்களா?... இல்லை.. இது தான்சானியா நாட்டில் நடந்துள்ளது. 
 
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவின் தற்போது ஜான் மகுஃபுலி அதிபராக உள்ளார். இவர் அரசுத்துறையில் பல சீர்திருத்தங்களையும் அதிரடி நடவடிக்கைகளியும் எடுத்து வருகிறார்.
 
அரசு சார்பில் நடத்தப்படும் விழாக்களில் வீண் செலவுகளை குறைத்து, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது என அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரின் போது, சில எம்.பிக்கள் உள்துறை மந்திரியான சார்லஸ் கிட்வாங்காவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு சார்லஸ் பதிலளித்தார். ஆனால் அப்போது அவர் போதையில் இருந்ததாக தெரிகிறது.
 
இதனால் கோபமடைந்த அதிபர் ஜான் மகுஃபுலி, சார்லஸை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.