வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 2 மார்ச் 2015 (17:18 IST)

சிங்கப்பூரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிக்கு 16 ஆண்டு சிறை தண்டனை

சிங்கப்பூரில் ஒரு கொலை வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 20). இவர் சிங்கப்பூரில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடன் 31 வயது அறிவழகன் என்பவரும் வேலை பார்த்து வந்தார். எனினும் இருவருக்கும் அதிக அறிமுகமில்லை.
 
இந்த நிலையில் அறிவழகனின் பணப்பை (Money Purse) காணாமல் போனது. இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி அருகில் கிடந்த பாறாங்கல்லை அறிவழகனின் தலையில் போட்டு கொலை செய்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு  அறிவழகனின் உடலை ஒரு மேம்பாலத்தின் அடியில் இருந்து காவல்துறையினர் மீட்டனர்.
 
இந்த வழக்கில் சிங்கப்பூர் நீதிமன்றம் பெரியசாமிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்புக் கூறியது. மேலும் 12 முறை கசையடி கொடுக்கவும் உத்தரவிட்டது.