’இனிமே காலேஜ் பக்கம் காலெடுத்து வைக்கக் கூடாது?’ – தாலிபான் புதிய தடை!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் பல்கலைகழகங்களில் படிக்க திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டிற்கும் முன்னதாக ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. அதுமுதலாக தாலிபானில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள், அடக்குமுறைகள் அமலில் இருந்து வருகிறது. முக்கியமாக பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
ஆண்கள் துணையின்றி பொது இடங்களுக்கு செல்ல தடை, விமானத்தில் பயணிக்க தடை, ஆடை கட்டுப்பாடு என பல்வேறு கட்டுப்பாடுகள், தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தற்போது பல்கலைக்கழகங்களுக்கு சென்று படிக்கவும் இடைக்கால தடை விதித்து தாலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடைக்கால தடை அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit By Prasanth.K