Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வேடிக்கை பார்த்த இளைஞருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைத்த வெகுமதி

Last Modified வியாழன், 11 ஜனவரி 2018 (02:59 IST)
துருக்கியில் உள்ள ஜிம் ஒன்றை கண்ணாடி வழியாக வேடிக்கை பார்த்த ஷூ பாலீஷ் செய்யும் வாலிபர் ஒருவருக்கு அதே ஜிம்மில் வாழ்நாள் முழுவதும் பயிற்சி செய்யும் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

துருக்கியில் உள்ள புகழ் பெற்ற ஜிம்
ஒன்று இயங்கி வருகிறது. உடல் எடையை குறைக்க பல பெரிய பணக்காரர்கள் வந்து போகும் ஜிம் இது. இதில் மெம்பர் ஆவதற்கு பெரும் கட்டணம் செலுத்த வேண்டும்

இந்த நிலையில் இந்த ஜிம்மில் பயிற்சி செய்பவர்களை சிரியா நாட்டின் அகதியும், ஷூ பாலீஷ் போடும் இளைஞருமான ஒருவர் நீண்ட நேரம் கண்ணாடி வழியாக பார்த்து கொண்டிருந்தார். இந்த ஜிம்மிற்குள் வாழ்க்கையில் ஒருநாளாவது நுழைய நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்குமா? என்பதே அந்த இளைஞரின் எண்ணமாக இருந்தது

இந்த நிலையில் வாலிபர் ஜிம்மை பார்த்து கொண்டிருந்ததை வாலிபரை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்தார். இந்த புகைப்படம் வைரலாகியது. இந்த புகைப்படத்தை பார்த்த ஜிம் உரிமையாளர் அந்த வாலிபரை தேடி கண்டுபிடித்து அவருக்கு ஜிம்மில் பயிற்சி செய்யும் வாழ்நாள் பாஸ் வழங்கியுள்ளார். இதனால் இன்ப அதிர்ச்சியில் அந்த இளைஞர் திக்குமுக்காடி போனார் என்பதை சொல்லவும் வேண்டுமா?


இதில் மேலும் படிக்கவும் :