வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 28 நவம்பர் 2015 (12:56 IST)

முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய தடை: மீறினால் ரூ.6½ லட்சம் அபராதம்

சுவிட்சர்லாந்து நாட்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற டிசினோ மாகாணத்தில் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. 


 
 
கடந்த 2013ம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய சுவிட்சர்லாந்தில் டிசினோ மாகாணத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் கருத்து கேட்கும் வகையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 3 இல் 2 பங்கினர் பர்தா அணிய தடை விதிக்க வலியுறுத்தி வாக்களித்தனர். இதையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டு டிசினோ பாராளுமன்றத்தில் அதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
இதனை தொடர்ந்து டிசினோ மாகாணத்தில் பொது இடங்களில் பர்தா உடை அணிந்து வரும் பெண்களுக்கு 6.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடைகள், உணவு விடுதிகள், பொதுமக்கள் கூடும் பகுதிகள், கார் ஓட்டும் போதும் பெண்கள் பர்தா அணியக்கூடாது என்று டிசினோ மாகாணம் தெரிவித்துள்ளது.