ஜூஸ் என நினைத்து சோப்பு கரைசலை குடித்த கஸ்டமர்கள்! – சப்ளையர் செய்த சம்பவம்!
சீனாவில் ஜூஸ் ஆர்டர் செய்த கஸ்டமர்களுக்கு சப்ளையர் சோப்பு கரைசலை கொடுத்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஜெஜியாங் பகுதியில் பிரபலமான உணவகம் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. அந்த உணவகத்தில் வுகாங் என்ற பெண் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 6 பேருடன் உணவு அருந்த சென்றுள்ளார். அங்கு அவர்கள் ஜூஸ் ஆர்டர் செய்துள்ளனர்.
சப்ளையர் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்த நிலையில் அதை குடித்த அவர்களுக்கு தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சோப்பு கரைசலை குடித்ததாக சோதனையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து உணவகம் அளித்த விளக்கத்தில் சப்ளையருக்கு பார்வை குறைபாடு இருந்ததாகவும் சோப்பு கரைசல் கேன் ஜூஸ் பாட்டில் போல இருந்ததால் அவர் தவறுதலாக அதை ஊற்றி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சீனாவில் பல சோப்பு கரைசல் கேன்கள் கலர் கலரான ஃப்ளேவர்களில் ஜூஸ் பாட்டில் போலவே இருப்பதால் குழப்பங்கள் நிகழ்வதாக நெட்டிசன்கள் பலரும் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
Edit by Prasanth.K