ஜூபிட்டரில் மையம் கொண்டுள்ள, பூமியைவிட 1.3 மடங்கு பெரிய புயல்!!
நாசா ஆராய்ச்சி மையம் சமீபத்தில் ஜூபிட்டரின் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படம் தற்போது வைராலகியுள்ளது.
அந்த புகைப்படத்தில் ஜூபிடர் கிரகத்தில் மிகப்பெரிய மேகமண்டலம் காணப்படுவதாகவும், பெரும் புயல் ஒன்று மையம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஜூபிட்டரில் சிவப்பு புள்ளி ஒன்று காணப்பட்டது. அந்த சிவப்பு புள்ளி பத்தாயிரம் மைல்கள் பரப்பளவு கொண்ட மேகக் கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது பூமியை விட 1.3 மடங்கு பெரியது என்றும் பூமியில் ஏற்படும் மிகப்பெரிய புயலை விட 10 மடங்கு தூரத்தை கடக்கக் கூடியது என்றும் கூறப்பட்டுள்ளது.