முதன் முதலாக அழகுக்கலை போட்டியில் இலங்கைப் பெண் வெற்றி

SRILANKAN
Last Updated: புதன், 12 செப்டம்பர் 2018 (19:23 IST)
பாரிஸில் நடைபெற்ற அழகுக்கலை போட்டியில் இலங்கைப் பெண் நிபுணர் முதன்முதலாக வெற்றயுரோப்பா கண்டத்தைச் சேர்ந்த  பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் கடந்த 10ம் தேதியன்று
அழகுக்கலைப் போட்டி நடைபெற்றது.இதில் ஆசியா கண்டத்திலிருந்து சேர்ந்த இலங்கை நாட்டவரான அழகு கலை நிபுணர் கயல்விழி பங்கேற்று அவரது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இலங்கையிலிருந்து சென்று சர்வதேச அளவிலான அழகுகலை போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவது இதுவே முதல்முறையாகும்.

போட்டி நடந்து ஒருநாள் கழித்து அதாவது 11ம் தேதிதான் போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் கயல்விழி வெள்ளிப் பரிசு வென்றார்.

போட்டியில் பங்கேற்றுவிட்டு இலங்கைக்கு திரும்பிய கயல்விழிக்கு கண்டு நாயக்க பண்டார நாயக்க விமான நிலையத்தில் அமோகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் அழகுக்கலை நிபுணரான  கயல்விழி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராவார்.


இதில் மேலும் படிக்கவும் :